பெதஸ்தா மருத்துவமனை ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட்

பெதஸ்தா மருத்துவமனை ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்வதற்கு நிலத்தை விற்பதற்காக, 25.07.2019 அன்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது . உத்தரவின் நகல் 29.07.2019 அன்று கிடைக்கப்பெறும்.

 

Rev. T. Devadass (Retd.) and Kodaikanal Pastorate

அருள்திரு T. தேவதாஸ், கொடைக்கானல் மவுண்ட் சீயோன் லூத்தரன் திருச்சபையில் உள்ள ஓய்வு  பெற்ற போதகர். அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றுவிட்டார்.  IELC  நிர்வாக குழு, பல்வேறு  பிரச்சனையால் நிர்வாகம்   செயல்படவில்லை. எனவே அங்கு  போதகர் நியமனம் செயல்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம் IELC- யை நிர்வகிக்க 31.07.2018 தேதியிட்ட உத்தரவின் படி, IELC நிர்வாகியாக நீதிபதி து. அரிபரந்தாமன் (ஓய்வு) அவர்களை நியமித்தது. 26.09.2018 அன்று IELC நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பல்வேறு திருச்சபைகளில் போதகர்கள்  ஓய்வு பெற்றதால் அந்த திருச்சபைகளில் போதகர்களை நியமனம் செய்வதற்காகவும்,  6 ஆண்டுகள் பணி முடிந்த போதகர்களுக்கு அழைப்பின் பேரில்  பணியிட மாற்றத்திற்காகவும் நாகர்கோயில் சினாடில்   21.05.2019 மற்றும் 22.05.2019 தேதிகளில் கலந்தாய்வு  நடைபெறும் என்பதை 02.05.2019 தேதியிட்டு கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அந்த  கலந்தாய்வில் அருள்திரு. A. மோகன் அவர்கள்  கொடைக்கானல் திருச்சபைக்கு   நியமிக்கப்பட்டார். (உத்தரவு  இணைக்கப்பட்டுள்ளது)  இதை அறிந்ததும் அருள்திரு தேவதாஸ் அவர்கள் 15.05.2019 தேதியிட்ட  கடிதம்  எழுதியுள்ளார். அதில் ரூ.60 இலட்சம் அவருக்கு IELC  நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்றும்,  ஆனந்தகிரி 2வது தெருவிலுள்ள இடத்தையும் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அருள்திரு A. மோகனுக்கு அளித்த உத்தரவில் கூறியுள்ளவாறு 01.06.2019 (சனிக் கிழமை) அன்று, கொடைக்கானலில் உள்ள திருச்சபைக்கு, குறிப்பிட்டுள்ளவர்கள் நேரில் செல்ல உள்ளனர்.