அய்யா

  1. தங்களின் 29.08.2019 தேதிய கடிதத்தில் 3 செய்திகளை கூறியுள்ளீர்கள். அச்செய்திகள்சம்மந்தமான எனது பதிலே, இக்கடிதம்.
  2. முதல் செய்தி என்னவெனில், தாங்கள் என்னை பலமுறை நேரில் சந்தித்து IELC – யின்வளர்ச்சிகளை குறித்து பல விஷயங்களை  பேசியதாகவும், ஆனால்  நான்அவ்விசயங்களை  நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளீர்கள்.
  • என்னை தாங்கள்  நேரில் எனது இல்லத்தில் இருமுறை சந்தித்தீர்கள்  என்பதுஎனது நினைவு. எனவே பலமுறை சந்தித்ததாக  கூறுவது சரியில்லை. அதில்ஒருமுறை, ஆம்பூரில் பணிபுரியும் ஆசிரியர்  திரு. ஜோன்ஸ் அவர்களுடன்சந்தித்தீர்கள்.
  • என்னை நேரில் சந்தித்தபோது,  IELC – யின் வளர்ச்சிகளை குறித்து பேசியதாகவும்,அவைகளை நான் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளீர்கள்.
  • IELC- யின் வளர்ச்சிகளை பற்றி தாங்கள் பேசிய விவரத்தை தெளிவாகவும்,துல்லியமாகவும் இப்பொழுதாவது தெரிவிக்கும்படி  கேட்டுக்கொள்கிறேன்.பின்னர்தான்  தங்களின்  குற்றச்சாட்டுகளுக்கு  பதில் அளிக்க இயலும்.
  1. அடுத்து, தங்கள் கடிதத்தில் உயர் நீதிமன்றம் IELC – யின் அமைப்பு சட்டவிதிகளைசரிசெய்யச் சொல்லியிருப்பதாக கூறியுள்ளீர்கள். 31.07.2018 தேதிய மாண்புமிகு சென்னைஉயர் நீதிமன்ற  உத்தரவில் அதுபோன்று  குறிப்பிடப்படவில்லை.  இருப்பினும் நிர்வாகிஎன்ற முறையில் நான் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதன்தொடர்ச்சியாக வரும் 18-19 செப்டம்பர் 2019 காலை 10 முதல் 5 மணி வரை அன்று இரு தரப்புதலைவர்களையும் இது சம்மந்தமாக பேச அழைக்க உள்ளேன். தாங்களும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இதையே என்னுடைய அழைப்பு கடிதமாக ஏற்று18.09.2019 மற்றும் 19.09.2019 அன்று நடக்கும்  கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
  2. அசெஸ்மென்ட் பொறுத்தவரை ஏப்ரல் 2019 – லிருந்து உயர்வு செய்து அனைத்து போதக வட்டத்திற்கும் அனுப்பியுள்ளேன். உயர்த்தப்பட்ட  அசெஸ்மென்ட் தொடர்பாக நல்லமுன்னேற்றம்  ஏற்பட்டுள்ளது. இன்னும் முழுமை அடையவில்லை.
  3. பல்வேறு ஆசிரியர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுத்தவழக்குகளில், உயர் நீதிமன்றம் எனக்கு பல்வேறு உத்தரவுகளை அளித்து, ஆசிரியர்நியாயமனங்களில்  உரிய முடிவை எடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.
  4. என்னை நிர்வாகியாக நியமித்த உத்தரவிலேயே, அனைத்து நியமனங்கள்சம்மந்தமான முடிவை எடுக்கச் சொல்லியுள்ளது உயர்நீதிமன்றம்.  தேவையிருப்பின்,உங்கள் வழக்குரைஞர் திரு. கோவர்தனிடம் இதை விசாரித்து தெரிந்து கொள்ளவும்.