Reply :

” எதிரெதிர் முகாம்களாக IELC -இல் செயல்பட்ட / செயல்பட்டு வரும் இரண்டு குழுக்களையும் அழைத்து 02.04.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

 
அதில் ஒரு தீர்மானம், 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாஸ்ட்ரேட்டில் பணிபுரியும் போதகரை மே 2019 -இல் கவுன்சிலிங் முறை மூலம் பணியிட மாற்றம் செய்வது என்பதாகும்.
 
மேலும் 09.04.2019 கூடிய சர்ச் கவுன்சில் இதே முடிவை எடுத்தது. இது போன்ற முடிவை 2012-ஆம் ஆண்டில் சர்ச்  கவுன்சில்  கூட்டத்திலும்  எடுத்திருப்பினும், அதை  நிறைவேற்றுவதற்கு முன்னர் IELC  இரண்டாக பிரிந்தது. அதன் விளைவாக தான் நான் நிர்வாகியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டேன்.
 
எனவே 02.04.2019  அன்று எடுத்து முடிவின் அடிப்படையில், மே 16, 2019 அன்று ஆம்பூரில் உள்ள இம்மானுவேல் லுத்தரன் சர்ச்சில் பாரிஸ் ஹாலில்  எனது 23.04.2019 தேதிய சுற்றறிக்கையின் படி  போதகரின் பணியிட மாற்றலுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
 

அந்த சுற்றறிக்கையில் கண்டுள்ளபடி, தங்கள் பாஸ்ட்ரேட்டில் பணிபுரியும் போதகர் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதால், அவர் தங்கள் சபையில் தொடர முடியாது; தாங்கள் வேறு  போதகரை என் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ள மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். “