பெறுநர்

தலைமை ஆசிரியர்

கன்கார்டியா மேல்நிலை பள்ளி

ஆம்பூர்.

 

அம்மையீர்

திருமதி K. V. மேரி சுகுணா, சமூக அறிவியல் பட்டதாரியாக தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியராக திரு. பால்  கிருபாகரன் ஓய்வு பெற்றதை ஒட்டி, திருமதி. K. V. மேரி சுகுணா அவர்கள் 03.10.2013 முதல் +1, +2 வகுப்புகளுக்கு வரலாறு  ஆசிரியராக பணியாற்றி வந்ததாகவும், ஆனால்  இந்த ஆண்டு அவருக்கு  வரலாற்று ஆசிரியர் பணி தராமல்,  இடைநிலை ஆசிரியராக  பணிபுரிந்து வரும் திரு. சகிந்தர் அவருக்கு அப்பணியை கொடுத்ததாக  என்னிடம் K. V. மேரி சுகுணா அவர்கள் நேரில் புகார்  கூறினார்.

எனவே இது சம்மந்தமாக தங்களது விளக்கத்தை உடனே அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவர் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திருமதி  K. V. மேரி சுகுணா அவர்களை +1,+2 வகுப்புகளுக்கு வரலாறு பாட ஆசிரியராக  உடனே அனுமதிக்கும்படி உத்தரவிடப்படுகிறது.

திருமதி K. V. மேரி சுகுணா  அவர்களுக்கு +1, +2 வகுப்புகளுக்கு வரலாற்று பாட ஆசிரியராக அனுமதித்தது தொடர்பான அறிக்கையை உடனே அளிக்கவும்.

 

குறிப்பு : பர்கூர் பள்ளியில் 100% தேர்ச்சி விகிதம் இருக்கும் போது,  தங்கள் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு இது போன்ற சில காரணங்கள் இருக்கும்போது எப்படி தேர்ச்சி விகிதத்தை  உயர்த்த முடியும் ?