பெறுநர்

  1. A. Vijayakumar

Chairman, Education Committee

Ambur Synod

 

  1. G. Kumar

Secretary, Education Committee

Ambur Synod

 

அய்யா

பொருள் : தங்களின் 29.08.2019 தேதியிட்ட கடிதத்திற்கு பதில்

என்னை உயர் நீதிமன்றம் நிர்வாகியாக நியமித்த உத்தரவில்,  நியமனங்கள் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகி அவர்களுக்கு தான் உண்டு என்று தெளிவாக கூறியுள்ளது.

எனவேதான் தாளாளர்களை நியமித்த உத்தரவிலேயே, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம்  செய்யும் உரிமை / அதிகாரம் தாளாளர்களுக்கு இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுளேன்.

உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில்  இருதரப்பினர்களாலும் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்  அனைவரையும் விசாரிக்க உள்ளேன்.

எனவே தாங்கள்  பட்டியலிட்டுள்ள 18 ரிட்மனுக்கள் தாக்கல் செய்தவர்களையும் விசாரிக்க உள்ளேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

ஒவ்வொரு  சனிக்கிழமை தோறும்  மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விசாரணை நடைபெறும்.

வள்ளியூர் மற்றும் வடக்கன்குளம்  பள்ளிகளில் நியமனம் பற்றிய விசாரணையை ஐந்து சனிக்கிழமைகளில் நடத்தி முடித்துள்ளேன்.

பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் அரசின் ஒப்புதல் பெறாத ஆசிரியர்கள் மூலம் பள்ளி நடத்துவது, மாணவர்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டே இந்த விசாரணை நடத்தி, உரிய ஆசிரியர்கள் நியமனம் பற்றி முடிவு செய்ய உள்ளேன்.

தாங்கள், தங்கள் கடிதம் பத்தி 8-ல் சுட்டிக்காட்டியது போல ஆம்பூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பற்றி நிர்வாகி முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்பதவிக்கு இருவர் உரிமை கோருகின்றனர். அந்த இருவரையும் விசாரிக்க  உள்ளேன். அந்த இருவரையும் வரும் சனிக்கிழமை 31.08.2019 அன்று நேரில் விசாரணைக்கு வர அறிவிப்பு  அனுப்பியுள்ளேன்.

இதேபோல ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றியும் முடிவெடுக்க வேண்டாமா?

மேலும், மற்ற ஆசிரியர்கள்  மற்றும் ஊழியர்கள் பற்றியும் முடிவெடுக்கவே இந்த விசாரணை என்பதை தெரிவித்துக்  கொள்கிறேன்.

ஆசிரியர்  நியமனம் பற்றி நிர்வாகி  முடிவெடுக்கக்  கூடாது என்ற உயர் நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.