அய்யா

 

திரு. பென்னிமேன் இடைநிலைப்  பள்ளி  ஆசிரியர்  மற்றும்  பணியாளர்கள்  கூட்டுறவு  சிக்கனம்  மற்றும் கடன்  சங்கத்தில் பெற்ற கடனை, அவர் பணிபுரிந்த காலத்தில் அவரின்  சம்பளத்தில் இருந்து பிடித்தம்செய்யாதவாறு பார்த்துக் கொண்டார் என்றும்,  இதற்கு  தலைமை  ஆசிரியரும் உதவி புரிந்துள்ளார்என்றும் எனக்கு அச்சங்க தலைவர் புகார் அனுப்பியுள்ளார்.

அப்புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தாளாளர் பொறுப்பு வகிக்கும் தகுதியை அவர்இழந்தவராக கருதுகிறேன்.

மேலும், இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் பெயரிலும் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். சம்மந்தப்பட்ட தலைமையாசிரின் விவரம் அனுப்பவும் .

இத்துடன் சங்க தலைவர் அனுப்பிய புகார் நகல்களை இணைத்துள்ளேன்.

தாங்கள்  இது சம்மந்தமாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவும்.