Bethesda Workmen settlements

ஆம்பூரிலுள்ள பெதஸ்தா மருத்துவமனை நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1919 -இல் ஆம்பூரில் நிறுவப்பட்டது. 200 படுக்கை வசதிகள் கொண்டது. ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஏழை மக்களுக்கு மருத்துவ வசதியை செய்து வந்தது.

ஆனால் IELC  நிர்வாகம் 2013-இல் இரண்டாக பிளவுண்ட போது,  மருத்துவமனையும் இரட்டைத் தலைமைக்கு உட்பட்டு தள்ளாட தொடங்கியது.  தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான வருவாயே ஈட்ட முடியாமல் போனது.

எப்பொழுது, சம்பளமே கொடுக்க முடியவில்லையோ, உடனே மருத்துவனையை மூடி, பின்னர் திறப்புக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால்,  ஒரு மாதச்  சம்பளத்தை பல மாதங்கள் கழித்து, அதுவும் பகுதி பகுதியாக தருவது என்ற முறையில் ஆரம்பித்து, 2013-இல்  இருந்தே வருங்கால வைப்புநிதி (PF) செலுத்தாமல் இருந்து, சங்கிலிக் குப்பத்தில் இருந்த 1 ஏக்கர் IELC – TA  நிலத்தை விற்றும் PF பாக்கி அடைபடவில்லை என்று PF நிர்வாகம் கூறி, ஏலகிரி மலையில் உள்ள IELC  நிலத்தை விற்கப்போவதாக கூறிய நிலையில் உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமித்தது.

மார்ச் 2015 இறுதியில் ஏப்ரல் 1 முதல் மருத்துவமனை மூடப்பட்டது. அதற்குப் பின் தொழிலாளர்கள் பணி இழந்தனர்.

31.03.2015 – இல் மூடப்பட்டதின் விளைவாக 240 தொழிலாளர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய,

  1. 31.03.2015 வரை சம்பள பாக்கி
  2. பணிக்கொடை (Gratuity)
  3. மூடுவதற்கான நஷ்ட ஈடு
  4. மூடுவது பற்றிய ஒரு மாத அறிவிப்புக்கு பதில் ஒரு மாத சம்பளம்

என்ற வகையில் சுமார் ரூபாய்  5 கோடி தரவேண்டி உள்ளது என்பதை ஒரு மாதத்திற்கும் மேலாக, மருத்துவமனை    கணக்கு (Accounts ) பிரிவில்  பணிபுரியும் தொழிலாளர்களின் உதவியுடன் கணக்கிட்டு, ஆடிட்டர் திரு. மகாகணபதி அவர்கள் மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில் கணக்கிட்டு அளித்ததன்  அடிப்படையில் 12.06.2019 அன்று, நிர்வாகி ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவமனை சர்ச் வளாகத்தில் தொழிலாளர்களுடன் இது சம்மந்தமான ஒப்பந்தம் செய்தார்.

அந்த 240 தொழிலாளர்கள் 5 பிரிவாக உள்ளனர். அவர்களுக்கு சேர வேண்டிய தொகைகள் பற்றிய விபரமும், ஒப்பந்த நகலும் இங்கே பதிவிடப்படுகிறது :


இதற்குப்பின், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMC Hospital ) பெதஸ்தா மருத்துவமனையை  மிஷினரி நோக்கில் இயக்க சம்மதம் தெரிவித்துள்ளது.  இதைப்  பற்றியும், நிர்வாகி  CMC   –  நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து  உரிய ஏற்பாட்டை செய்வார்.தொழிலார்களுக்கு சட்டப்படி  சேர வேண்டிய தொகைகளை கொடுப்பதற்காக, அதற்கான நிலத்தை விற்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியை நிர்வாகி விரைவில் பெற்று, ஒப்பந்தப்படி பணம் கிடைக்க ஏற்பாடு செய்வார்.