கரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பை அனைவரும் அறிவர். நமது தேவாலயங்கள் உட்பட அனைத்து வழிபாட்டு இடங்களிலும் மக்கள் கூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏப்ரல் 14 வரை தடை விதித்துள்ளது.

இந்த தடை ஏப்ரல் 14-இல் விலக்கிக்கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. இது மேலும் நீட்டிக்கப்படலாம். எவ்வளவு காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை.

இது IELC-க்கு மிகப் பெரிய அளவில் சிரமத்தையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, போதகர்களுக்கு ஊதியம் வழங்குவது மிகுந்த சிரமமான காரியமாக உள்ளது. மார்ச் மாதம் முதல் மூன்று வாரம் திருச்சபைகளில் ஆராதனை நடைபெற்ற போதிலும், பல போதக வட்டங்கள் அசஸ்மென்ட் செலுத்தவில்லை. அசஸ்மென்டை செலுத்தக் கோரி நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதற்கு நல்ல பலன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

சக்தியுள்ள சபைகள் அசஸ்மென்ட் செலுத்தினாலும், சுமார் 25% முதல் 30% சபைகளால் அசஸ்மென்ட் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அசஸ்மென்ட் கட்ட இயலாத சபைகளின் போதகர்களுக்கு ஊதியம் வழங்குவது சாத்தியம் இல்லை.

IELC -இன் அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதும் சாத்தியம் இல்லாமல் போகும்.

எனவேதான், இந்த வேண்டுகோள்.

26-09-2018-இல் நான் நிர்வாகியாக பொறுப்பேற்ற பின், CBO-விற்கு அசஸ்மென்ட் செலுத்துவதை முறைப்படுத்தி, போதகர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

அசஸ்மென்டில் மாதாமாதம் வந்த சிறு உபரியின் மூலம் ஜனவரி 2020 வரை சேர்ந்ததை கொண்டுதான், 2013 முதல் ஓய்வு பெற்ற போதகர்களுக்கு பிப்ரவரி 2020-இல் ஓய்வூதிய பலன்கள் (பிராவிடண்ட் பண்டு) வழங்கப்பட்டது; 2019-இல் கிறிஸ்துமஸ் கிப்டு சுமார் 7 லட்சம் வழங்கப்பட்டது; 2013 முதல் கட்டப்படாமல் இருந்த சொத்துவரி உட்பட சொத்துவரி ரூபாய் 11 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது; சொத்து சம்மந்தமான ஆவணங்களை கணணி மயமாக்குதல் (Digitalisation) வேலை தொடங்கப்பட்டது. கணணி மயமானதும், ஆவணங்கள் IELC இணையதளத்தில் பதிவிடப்படும். மேற்கண்ட செலவுகள் செய்ததன் விளைவாக கரோனா நெருக்கடியை எதிர் கொள்ள பண இருப்பு ஏதும் பெரிதாக இல்லை. கரோனா நெருக்கடி வரும் என்பது எவருக்கும் தெரியாதல்லவா?

இந்த கஷ்ட காலத்தில், IELC பள்ளிகளில் பணிபுரிவோர் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

IELC-யை சேர்தவர்கள் அரசு பணிகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும், மற்றும் இதர துறைகளிலும் பணிபுரிகின்றனர். அவர்களும் இந்த சமயத்தில் IELC-க்கு உதவிட வேண்டுகிறேன்.

IELC-இல் வசதி படைத்தோரும், வெளிநாடுகளில் பணி புரிவோரும் உண்டு. இந்த இக்கட்டான நேரத்தில், அவர்களின் உதவியும் IELC-க்கு மிகவும் தேவை.

மேற்சொன்ன அன்பர்கள் கருணை உள்ளம் கொண்டு உதவ வேண்டுகிறேன். இந்த அன்பர்கள் தாராளமாக மனமுவந்து நிதி உதவி செய்யும் பட்சத்தில், இந்த இக்கட்டான தருணத்தை எளிதில் கடந்து விட முடியும் என்றும், போதகர்கள் அனைவருக்கும் ஊதியம் அளித்திட இயலும் என்றும் கருதுகிறேன்.

எனவே, இந்த அன்பர்கள் மற்றும் துன்பப்படுவோருக்கு உதவும் எண்ணம் கொண்டோர் ஆகிய அனைவரும் கால தாமதமின்றி IELC-இன் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டுகிறேன்.

Indian Overseas Bank
Scott Christian College- Nagercoil Branch
Kottar, Parvathipuram Road,
Nagercoil-629003
Current Ac No. 176102000000277
IFSC : IOBA0001761

இந்த கரோனா நெருக்கடி தீரும் வரை, தொடர்ந்து நிதி உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.

நிதி அனுப்புவோர் IELC-இன் CBO அலுவலக மின்னஞ்சல் [email protected]க்கு நிதி செலுத்திய விவரத்தை தெரிவிக்கவும்.
நிர்வாகியின் மின்னஞ்சல் [email protected]க்கும் தகவல் தெரிவிக்கவும்.

நிதி அளிப்போர் மற்றும் நிதி அளித்த விவரம் IELC-இன் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

IELC பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியில் இருப்போர் தனியாகவோ அல்லது தலைமை ஆசிரியர் மூலமாகவோ உரிய காசோலை (cheque) அல்லது வரைவோலை (demand draft) மூலம் அனுப்பவும்.

Justice D. Hariparanthaman
Administrator — IELC