Mr. Viajayakumar, handed over the Bethesda School of Nursing Bus
பெதஸ்தா நர்சிங் பள்ளியின், Swaraj Mazda பதிவு எண் TN23BZ7741 வாகனத்தை, 10.09.2019 அன்று காலை 9 மணியளவில் திரு. விஜயகுமார் அவர்கள் அப்பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.
A mail sent to the Headmistress, Concordia Higher Secondary School, Ambur
பெறுநர்
தலைமை ஆசிரியர்
கன்கார்டியா மேல்நிலை பள்ளி
ஆம்பூர்.
அம்மையீர்
திருமதி K. V. மேரி சுகுணா, சமூக அறிவியல் பட்டதாரியாக தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியராக திரு. பால் கிருபாகரன் ஓய்வு பெற்றதை ஒட்டி, திருமதி. K. V. மேரி சுகுணா அவர்கள் 03.10.2013 முதல் +1, +2 வகுப்புகளுக்கு வரலாறு ஆசிரியராக பணியாற்றி வந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு அவருக்கு வரலாற்று ஆசிரியர் பணி தராமல், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு. சகிந்தர் அவருக்கு அப்பணியை கொடுத்ததாக என்னிடம் K. V. மேரி சுகுணா அவர்கள் நேரில் புகார் கூறினார்.
எனவே இது சம்மந்தமாக தங்களது விளக்கத்தை உடனே அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அவர் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திருமதி K. V. மேரி சுகுணா அவர்களை +1,+2 வகுப்புகளுக்கு வரலாறு பாட ஆசிரியராக உடனே அனுமதிக்கும்படி உத்தரவிடப்படுகிறது.
திருமதி K. V. மேரி சுகுணா அவர்களுக்கு +1, +2 வகுப்புகளுக்கு வரலாற்று பாட ஆசிரியராக அனுமதித்தது தொடர்பான அறிக்கையை உடனே அளிக்கவும்.
குறிப்பு : | பர்கூர் பள்ளியில் 100% தேர்ச்சி விகிதம் இருக்கும் போது, தங்கள் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு இது போன்ற சில காரணங்கள் இருக்கும்போது எப்படி தேர்ச்சி விகிதத்தை உயர்த்த முடியும் ? |
Letter to the Vaanmalar Pastorate, Chennai
Letter sent to the Teachers of the Concordia Higher Secondary School, Ambur
Letter sent to the Thuthipet – A Pastorate
Letter sent by Mr. Benniman, Ambur
Letter sent to the Education Committee, Ambur Synod
பெறுநர்
- A. Vijayakumar
Chairman, Education Committee
Ambur Synod
- G. Kumar
Secretary, Education Committee
Ambur Synod
அய்யா
பொருள் : தங்களின் 29.08.2019 தேதியிட்ட கடிதத்திற்கு பதில்
என்னை உயர் நீதிமன்றம் நிர்வாகியாக நியமித்த உத்தரவில், நியமனங்கள் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகி அவர்களுக்கு தான் உண்டு என்று தெளிவாக கூறியுள்ளது.
எனவேதான் தாளாளர்களை நியமித்த உத்தரவிலேயே, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யும் உரிமை / அதிகாரம் தாளாளர்களுக்கு இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுளேன்.
உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் இருதரப்பினர்களாலும் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் விசாரிக்க உள்ளேன்.
எனவே தாங்கள் பட்டியலிட்டுள்ள 18 ரிட்மனுக்கள் தாக்கல் செய்தவர்களையும் விசாரிக்க உள்ளேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விசாரணை நடைபெறும்.
வள்ளியூர் மற்றும் வடக்கன்குளம் பள்ளிகளில் நியமனம் பற்றிய விசாரணையை ஐந்து சனிக்கிழமைகளில் நடத்தி முடித்துள்ளேன்.
பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் அரசின் ஒப்புதல் பெறாத ஆசிரியர்கள் மூலம் பள்ளி நடத்துவது, மாணவர்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டே இந்த விசாரணை நடத்தி, உரிய ஆசிரியர்கள் நியமனம் பற்றி முடிவு செய்ய உள்ளேன்.
தாங்கள், தங்கள் கடிதம் பத்தி 8-ல் சுட்டிக்காட்டியது போல ஆம்பூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பற்றி நிர்வாகி முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்பதவிக்கு இருவர் உரிமை கோருகின்றனர். அந்த இருவரையும் விசாரிக்க உள்ளேன். அந்த இருவரையும் வரும் சனிக்கிழமை 31.08.2019 அன்று நேரில் விசாரணைக்கு வர அறிவிப்பு அனுப்பியுள்ளேன்.
இதேபோல ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றியும் முடிவெடுக்க வேண்டாமா?
மேலும், மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றியும் முடிவெடுக்கவே இந்த விசாரணை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் நியமனம் பற்றி நிர்வாகி முடிவெடுக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
A letter from Rev. J. Samuel, Former President – IELC – regarding Vellore Scam
Mail sent to the Education Committee, Ambur Synod
அய்யா
திரு. பென்னிமேன் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை, அவர் பணிபுரிந்த காலத்தில் அவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்செய்யாதவாறு பார்த்துக் கொண்டார் என்றும், இதற்கு தலைமை ஆசிரியரும் உதவி புரிந்துள்ளார்என்றும் எனக்கு அச்சங்க தலைவர் புகார் அனுப்பியுள்ளார்.
அப்புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தாளாளர் பொறுப்பு வகிக்கும் தகுதியை அவர்இழந்தவராக கருதுகிறேன்.
மேலும், இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் பெயரிலும் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். சம்மந்தப்பட்ட தலைமையாசிரின் விவரம் அனுப்பவும் .
இத்துடன் சங்க தலைவர் அனுப்பிய புகார் நகல்களை இணைத்துள்ளேன்.
தாங்கள் இது சம்மந்தமாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவும்.